ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை!

#India #children #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை!

போபால்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிகோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் திறந்து கிடந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து தீயணைப்புபடை மற்றும் மீட்பு படையினர் ,பொக்லைன், ஜே.சி.பி. வாகனங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஆம்புலனஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடக்கிறது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அறிந்த கிராமவாசிகள் அங்கு கூடியதால் பரபரப்பு காணப்படுகிறது. தவறி விழுந்த குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4