டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 40 அடி நீள கொள்கலனில் முப்பத்தைந்து கோடி ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட பொருட்கள்
பயன்படுத்தப்பட்ட வாகன உதிரி பாகங்கள் என குறிப்பிடப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 40 அடி நீள கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தைந்து கோடி ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட பொருட்களை நேற்று (06) இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கன்டெய்னரை சோதனை செய்ததில், நவீன பியர்ஸ் கார், இரண்டு அலியன் ரக கார்கள், வெளிநாட்டு மதுபான கையிருப்பு, வாசனை திரவியங்கள், ஏராளமான வெளிநாட்டு பெயின்ட்கள், ஏராளமான சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குறித்த மூன்று கார்களின் பெறுமதி மாத்திரம் நாற்பது மில்லியன் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது. இந்த பொருட்களை கொண்டு வருவதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்ட வரி தொகை சுமார் 22 கோடி ரூபாய்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் குறித்த கொள்கலன் ஒருகுடவத்தை கிரேலைன் 01 சுங்கப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு சந்தேகத்தின் பேரில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சரக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு கோட்டை சத்தம் வீதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் மூலம் துபாய் மாநிலத்தில் இருந்து இந்த நாட்டுக்கு இந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.