பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்வதற்கான முயற்சிகள்

#SriLanka #Arrest #Police #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை   கைதுசெய்வதற்கான முயற்சிகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை கைதுசெய்வதற்காக பொலிஸார் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 அவரை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான் இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள நிலையில் தன்னை கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவது குறித்து சபாநாயகருக்கு தெரிவிப்பதற்கு அவரை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் அது சாத்தியமாகவில்லை என்பதால் பிரதிநிசபாநாயகரை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு ஏஎஸ்பி தர அதிகாரியொருவர் தனது வீட்டிற்கு வந்துள்ளதை பிரதிசபாநாயகருக்கும் சபாநாயகருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

 தான் இன்று விசேட உரையாற்றவுள்ளதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தியவேளை அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் நீங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையம் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

 இதனை பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்துமாறு சபாநாயகரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!