நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலி

#Death #GunShoot #Terrorist #Village
Prasu
2 years ago
நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலி

நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். 

அதன்படி வடமேற்கு மாகாணமான சொகோடாவில் உள்ள ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!