பல லட்சம் மதிப்பிலான பாடசாலையை விற்க முயன்ற மாணவர்கள்

#School #America #advertisements #students
Prasu
2 years ago
பல லட்சம் மதிப்பிலான பாடசாலையை விற்க முயன்ற மாணவர்கள்

மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.

அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில், இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை. இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சினை இருக்கிறது. 

ஆனால் இங்கு நல்ல சமையல் அறை, உணவருந்தும் அறை உட்பட தனியாக கூடைப்பந்து அரங்கும் இருக்கிறது. இங்கு உங்களின் சொந்தக்காரர்களான எலிகள், பூச்சிகள் உங்களை அலறவைக்கும் என கூறியுள்ளனர்.

 மேலும் இதன் விலை 42,069 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பார்த்து இணைய தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!