க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத வந்த மாணவன் மற்றும் தாய் மீது தாக்குதல்
தம்புத்தேகம தேசிய பாடசாலை மாணவர்கள் தம்மையும்இ தனது மகனையும் நெடுஞ்சாலையில் வைத்து தாக்கியதாக, தம்புத்தேகம பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் மாணவன் ஒருவரின் தாயார் நேற்று (05) முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று பரீட்சை எழுத வந்த இந்த மாணவர், பரீட்சை எழுதி விட்டுச் செல்லும் போது, பரீட்சை எழுத வந்த மற்றுமொரு மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் பள்ளியின் பிரதான நுழைவாயிலில் இருந்து வெளியே வந்து மீண்டும் குறித்த மாணனைத் தாக்கியுள்ளனர்.
பரீட்சை எழுத வரும் தனது மகனை அழைத்து வருவதற்காக பாடசாலையின் பிரதான வாசலில் காத்திருந்த மாணவனின் தாய், சம்பவத்தை கண்டு தனது மாணவனைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் தற்போது பரீட்சை எழுதுவதால் பரீட்சை நிறைவடைந்த பின்னர் முறைப்பாடு எடுக்கப்படும் என தம்புத்தேகம பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளது.
ராஜாங்கனை யாய 4 பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவரும் அவரது தாயாருமே மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.