துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது

#Young #GunShoot #Tamilnews #ImportantNews #Coimbatore #Driver
Mani
3 years ago
துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது

பல்லடம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அபிஷேக். இவரது நண்பர் பரணிதரன். கோவையில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் பல்லடம் - தாராபுரம் பிரிவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அதனை ஓட்டி வந்த டிரைவர் கார் எதிரே நிறுத்தி, ஹெட்லைட்டை ஏன் இப்படி எரிய விட்டு கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காரை எடுத்து சிறிது தூரம் சென்ற அபிஷேக் திடீரென்று சென்று கொண்டிருந்த லாரியின் எதிரே காரை குறுக்கே நிறுத்தி துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொன்று விடுவேன் என்று டிரைவரை மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4