ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் சண்டையிட்ட 19 பேர் கைது
ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 14 சந்தேக நபர்களும் 05 பெண் சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம கடற்கரையில் படகு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வந்த முச்சக்கரவண்டியில் வாள் மற்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டது.
குறித்த முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.