இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார வலையமைப்புகள் இணைக்கப்படும்!

#India #SriLanka #Power
Mayoorikka
2 years ago
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார வலையமைப்புகள் இணைக்கப்படும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார வலையமைப்புகள் 2030ஆம் ஆண்டில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (6) தெரிவித்தார்.

 பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு பற்றி இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இணைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை புரிந்து கொள்ள உலக வங்கி இலங்கை மின்சார சபைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக உலக வங்கியின் பிராந்திய ஒருங்கிணைப்பு பணிப்பாளர் சிசிலி ஃப்ரீமன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!