கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையை விட்டு வெளியேற தடை!

#SriLanka #Court Order #Kilinochchi #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையை விட்டு வெளியேற தடை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இலங்கையை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 மருதங்கேணி பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (06) சமர்பித்த விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!