அதிக குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மாருக்கு உதவி வரும் தியாகி அறக்கொடை "சமூக ஜோதி" வாமதேவன் தியாகேந்திரன்
அதிக குழந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மாருக்கு உதவி வரும் தியாகி அறக்கொடை "சமூக ஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண், ஒரு பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ள குருநாகல் மாவட்டத்தின் தோராய, அட்டமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய துஷாணி லசங்கார என்ற சகோதர இன இளம் தாய்க்கு பெருளாதார நெருக்கடிமிக்க சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நான்கு குழந்தைகளை கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் இவர் பிரசவித்துள்ளார்.
இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகத்தலைவரும் சமூகச்செயற்பாட்டாளருமான "சமூக ஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி இக்குழந்தைகளின் பராமரிப்புக்காக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் மூலம் குறித்த தம்பதியினரின் இல்லத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், "இன, மத வேறுபாடுகளைக்கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட தேவையுடைய மக்கள் தன்னிடம் கேட்காமலே அவர்களின் இல்லம் தேடிச்சென்று உதவும் தன்மையை அந்தப்பரம்பரையில் வந்த ஒரு கொடை வள்ளல் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் என்றால் எவரிடமும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இதேவேளை, நான்கு குழம்தைகளைப் பிரசவித்துள்ளதுள்ள குறித்த துஷாணி லசங்கார என்ற தாய் கருத்துத்தெரிவிக்கும் போது, "இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் எனது குழந்தைகளின் பராமரிப்புக்காக உதவ முன்வந்தமை எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நாட்டில் மனிதாபிமானமிக்க இலங்கையர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு முன்னுதாரணமாகும். இச்சந்தர்ப்பத்தில் எனக்கு உதவிய அந்த நல்லுள்ளதிற்கும் இவ்வுதவியை எனது காலடிக்கு கொண்டு சேர்த்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும், இவ்வாறான நான்கு குழந்தைகளைப் பிரவேசித்துள்ள புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் தாய்க்கும் மற்றும் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளதுள்ள ஹட்டன்- மஸ்கெலியா புரன்வீன் ராணி தோட்டதைச்சேர்ந்த தமிழ்த்தாய்க்கும் குழந்தை பராமரிப்பு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனிதாபிமான வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் தியாகி அறக்கொடை நிதியம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக அதன் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
