வற் வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

#SriLanka #taxes
Mayoorikka
2 years ago
வற் வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

தற்போது நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 இதற்கமைய குறித்த வரி முறைமையை அகற்றுவதற்கு ஏற்றாற் போல் பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்கமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு வேலைத் திட்டத்திற்கமைய, பெறுமதி சேர் வரி பற்றிய முக்கிய இரண்டு மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 அதன்கீழ், அதிகளவு விடுவித்தலை நீக்கி பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை மறுசீரமைப்புச் செய்தல், இலகு படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்பட வேண்டியுள்ளது.

 தற்போதுள்ள பெறுமதி சேர் வரியை விடுவித்தல் மீண்டும் அடிப்படை விதிமுறைகளுக்கமைய அண்ணளவாக மொத்தத் தேசிய உற்பத்தியின் 1.2 % வீதமான வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு.

 அதற்கமைய, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கான விடுவிப்புக்களைப் போலவே, குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்கள் மீதான அழுத்தங்களை இலகுபடுத்துகின்ற மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளைப் பாதுகாக்கின்ற விடுவிப்புக்களைத் தொடர்ந்தும் பேணிக்கொண்டு, பெறுமதி சேர் வரி விடுவிப்புகளிலிருந்து அதிகளவை நீக்குவதற்கும், பெறுமதி சேர் வரியை மீளச் செலுத்துவதற்காக மிகவும் முறைசார்ந்த பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தி வேண்டியுள்ளது.

 எனவே தற்போது நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!