வரணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

#SriLanka #Jaffna #Death #Police #Accident #Lanka4
Kanimoli
2 years ago
வரணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் குறித்த சம்பவம் வரணி அம்மா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது கம்பம் ஒன்றில் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், 

குறித்த விபத்திலேயே இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இளைஞனின் சடலம் தற்போது ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் அம்பன் குடத்தனையைச் சேர்ந்த குணசெல்வம் நிரோஜன் என்கின்ற 31 வயதுடைய இளைஞனே மரணமடைந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!