வற்றாப்பளை கண்ணகி ஆலயதில் வைத்து முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Police
Mayoorikka
2 years ago
வற்றாப்பளை கண்ணகி ஆலயதில் வைத்து முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

 ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் இவர் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 ஆலயத்தில் பொங்கல் நிகழ்விற்காக வந்திருந்த வேளை இவர் பொலிஸாரால் வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!