சுவிஸில் நடைபெற்ற Cycle மரதன்

#SriLanka #swissnews #Lanka4
Kanimoli
2 years ago
சுவிஸில் நடைபெற்ற Cycle மரதன்

சுவிஸ் Lausanne மாநிலத்திலிருந்து பிரான்ஸ் Evian நகரைச்சென்றடைந்து மீண்டும் சுவிஸ் Lausanne மாநிலத்தை வந்தடையும் Cycle மரதன் நிகழ்வு இருபதாம் ஆண்டு நிகழ்வாக இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான ஓட்டவீரர்கள் பங்கேற்ற நிகழ்வாக சிறப்புடன் நடைபெற்று முடிந்தது.

 இந்நிகழ்வில் 65 Km தூர ஓட்ட நிகழ்வில் நான் பங்குபற்றியிருந்து நிறைவு செய்தேன்.முதல் 50 Km வரையும் விரைவான பயணமாகவும் மிகுதி 15 Km மலையேற்ற பகுதிகளாகவும் இருந்தது. மிகவும் கடினமான பாதையென்பதெல்லாவற்றையும் தாண்டி இலக்கைத்தொடவேண்டுமென்ற வேட்கைதான் என்னை என்னுளிருந்து உற்சாகமூட்டியது.

இந்நாள் தந்தையர்களின் நாள் என்பதாலும் என் எண்ண ஓட்டங்களில் நிறைந்திருந்து வழிநடாத்திய எங்கள் தேசப்பற்றாளன் செல்வம் அவர்களின் நிலைவலைகளே என் முன் நிழலாடியது.நண்பர்களே நாம் வாழ்க்கையில் கடந்து செல்லும் பாதைகளைவிட இலக்கைத்தொடுவதே இலட்சியமாகக்கொள்ளவேண்டும்.

 நாம் கடந்து வந்த பாதைகள் பாலைவனமாகக்கூட இருக்கலாம்.இலக்கைத்தொட்டுவிட்டு திரும்பிப்பாருங்கள் மனக்கண்களில் சோலைவனங்களாக காண்பீர்கள். வாழ்வின் கற்பிதங்களுக்கு சைக்கிள் ஓட்டம் என்ற விளையாட்டு சிறந்த உதாரணம் மட்டுமல்ல அவை மெய்யுணர்த்தவல்ல அபார சக்தியுடன் எம்மை வழிநடாத்தும். அதியுயர் சிந்தனையுடன் புதிய சித்தாத்தங்களை உருவாக்கிய நிறைவான மகிழ்வினை உணர்ந்தேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!