வெல்லம்பிட்டிய பகுதியில் இலக்குத் தவறிய துப்பாக்கிச் சூடு

#SriLanka #Police #Crime #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Prathees
2 years ago
வெல்லம்பிட்டிய  பகுதியில் இலக்குத் தவறிய  துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டிய, சலவத்த லேன் பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 முச்சக்கரவண்டி திருத்தும் கடையொன்றில் இருந்த நபரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 எவ்வாறாயினும், குறித்த நபருக்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தன்னைச் சுட வந்தவர் யார் என அடையாளம் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!