நாட்டின் ஆட்சியை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது - ரணில் விக்கிரமசிங்க

#SriLanka #Ranil wickremesinghe #srilankan politics
Kanimoli
2 years ago
நாட்டின் ஆட்சியை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து  திட்டமிடப்பட்டுள்ளது - ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் ஆட்சியை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்த பொருளாதார கொள்கையின் அடிப்படை படிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 தேசிய கொள்கையொன்றின்படி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த தேசிய கொள்கையை வகுப்பதில் அனைவருக்கும் இடையில் இணக்கப்பாட்டுக்கு வர முடியாவிட்டாலும், பல்வேறு விடயங்களில் பரந்த ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்திருந்தார்.

 கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் தேசிய கொள்கைகளை புறக்கணித்ததன் காரணமாகவே நாட்டில் பிரச்சினைகள் தோன்றியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!