முடிந்தால் இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவும் - சஜித் பிரேமதாச
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
#Lanka4
Kanimoli
2 years ago
முடிந்தால் இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்த்தி முழுமையாக ஆதரிக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தேர்தலில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், “உதாவக அரமுன” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனி ஆசனத்தில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டதில் ஆச்சரியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
.
தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியின் கதி என்னவென்பதை தாம் நன்கு அறிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.