இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்

#SriLanka #Jaffna #Police #Lanka4 #Church
Kanimoli
2 years ago
இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்

இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்றிரவு மேற்கொண்ட தாக்குதலில் தேவாலயத்தில் சுருபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து சேதம் ஆகியுள்ளது. அத்துடன் சுவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் குறித்து தகவல் பெறுவதற்கு இளவாலை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசிக்கு ஊடகவியலாளர் ஒருவரால் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் தன்னை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா என வினவினார். 

ஆனால் இளவாலை பொலிஸார் தகவல் வழங்க முடியாது என மறுத்துள்ளனர். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெளியே சென்றுவிட்டார் என்று கூறினர். அதற்கு ஊடகவியலாளர் "பொறுப்பதிகாரி வெளியே சென்றால் பதில் பொறுப்பதிகாரி ஒருவர் இருப்பார் தானே அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு தகவல் வழங்குங்கள்" என கூறினார்.

 இருந்தபோதும் பொலிஸார் தகவல் வழங்க மறுத்தனர். பொலிஸ் திணைக்களத்தின் நிலையான தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டிருந்த நிலையில், தகவலை பெறுவதற்கு பொறுப்பதிகாரிக்கு அழைப்பு மேற்கொள்ளுமாறு கூறினர். இதனால் குறித்த சம்பவத்திற்கும் இளவாலை பொலிஸாருக்கும் இடையே தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!