மன்னாரில் 2432 பேருக்கு மண்ணெண்ணெய் - அரச அதிபர் தெரிவிப்பு
#SriLanka
#Mannar
#government
#Lanka4
Kanimoli
2 years ago
மன்னார் மாவட்டத்தில் 2432 கடற்தொழிலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் பெயரில் சீன அரசாங்கத்தினால் குறித்த மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாக பிரிவுகளிலும் முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக 75 லீட்டரும் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.