மனம் நிறைந்த மௌனமும், மலையை தாங்கும் பொறுமையும். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 05 - 06 - 2023.
#today
#Ponmozhigal
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
Mugunthan Mugunthan
2 years ago
மனம் நிறைந்த
மௌனமும்,
மலையை தாங்கும்
பொறுமையும்,
இருப்பவரே
2023 இல்
வெற்றி பெறுவர்.

அடுத்தவனை
ஏளனம் செய்வதால்
உனக்கு ஒன்றும்
கிடைக்கப் போவதில்லை.
அடுத்தவனை
புகழ்ந்து பார்
எதிரியும்
உனக்கு நண்பனே.

எப்படி வாழப்போகிறோம்
என எண்ணாதே.
இப்படித்தான்
வாழ்வேனென
சபதம் கொள்.
நிச்சயம் நீ
வென்றே தீருவாய்.

புள்ளி போட்டுக்
கோலம் போடு
கோலம் அழகாகும்.
அதேபோல
திட்டம் தீட்டி
வாழ்வை ஓட்டு
வாழ்க்கை சிறப்பாகும்.

போர்வைக்குள் ஆயிரம்
துாக்கங்கள் வரலாம்.
ஆனால்
துாங்குவதற்காக
உன் வியர்வையை
செலவழிக்காதே.
காரணம்
உடலோ, மூளையோ
வியர்க்காமல்
பெறும் வெற்றி
நிலைக்காது.
