எரிபொருள் தொடர்பில் அமைச்சால் காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Fuel
Mayoorikka
2 years ago
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மே 27 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் 121 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எந்தவொரு முற்பதிவையும் மேற்கொள்ளவில்லையென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கான முற்பதிவுகளை அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேற்கொள்ளவில்லை என்பதையே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெளிக்காட்டுவதாக அவர்டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்