பிரதமர் மோடி ஒடிசாவுக்கு விரைகிறார்.

#India #Prime Minister #Death #Accident #Train #Tamilnews #Died
Mani
10 months ago
பிரதமர் மோடி ஒடிசாவுக்கு விரைகிறார்.

பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிடுவார் என்றும், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 900 பேர் காயம் அடைந்த நிலையில் மீட்புப்பணிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்கிறார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் பெங்களுரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று தனித்தனி ரயில்கள் மோதியதில் 17 ரயில் பெட்டிகள் முழுமையாக தடம் புரண்டன. பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிடுவார் என்றும், பின்னர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இன்றையை பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் பாலசோருக்கு வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பார்வையிட்டார்.

விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், ரயில் பாதுகாப்பு ஆணையர் சுதந்திரமான விசாரணை நடத்துவார் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றார். இது ஒரு பெரிய சோகமான விபத்து என்றும், ரயில்வே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.