பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் கைதிகள் விடுதலை!
#Sri Lanka
#Prison
Mayoorikka
3 months ago

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று (3) பொசன் போயா தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.
மேலும் சிறைக் கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி