அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷியாவுக்கு கொடுப்பதில்லை என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அணு ஆயுதங்களின் இருப்பிடங்கள், அவற்றின் ஏவுதல் புள்ளிகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
தகவலின் அடிப்படையில், இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டன. உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதன் மூலமும், உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கியதன் மூலமும் அமெரிக்கா பதிலடி கொடுத்தது.
அணு ஆயுதங்களை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறி, 'நியூ ஸ்டார்ட்'
ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனையடுத்து, அத்தகைய தரவுகளை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்வதில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.