ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையை அறிவித்த பிரதமர் மோடி

#India #Death #D K Modi #Crash #Train
Prasu
3 years ago
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையை அறிவித்த பிரதமர் மோடி

கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. 

இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர். ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4