‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியனாக இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர்

#world_news #Tamilnews #Breakingnews #ImportantNews #Sports News
Mani
2 years ago
‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியனாக இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர்

அமெரிக்காவின் பிரபலமான ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் வெற்றி பெற்றுள்ளார். ஆங்கில மொழி உச்சரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கிரிப்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது.

நடப்பாண்டிற்கான போட்டியில் புளோரிடாவின் லார்கோவில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தேவ் ஷா இறுதி சுற்றில் சாம்மோபைல் ((psammophile)) என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார்.

200 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற 8ம் வகுப்பு மாணவரான தேவ்ஷாவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய் (($50,000)) பரிசாக வழங்கப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி வெற்றி பெற்றிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!