துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கப்பட்ட கஜேந்திரகுமார் எம் பி!

#SriLanka #Jaffna #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கப்பட்ட   கஜேந்திரகுமார் எம் பி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலனாய்வாளர்களால் துப்பாக்கி முனையில் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

 இதுதொடர்பில் தெரியவவருவதாவது, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை அங்கு சந்தேகத்திற்கு இடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த பொழுது அதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பகுப்பாய்வு அதிகாரி கேட்டபோது தன்னை ஒரு புலனாய்வு அதிகாரி என. குறிப்பிட்டிருந்தார். 

 அவ்வேளை பகுப்பாய்வு அதிகாரி குறித்த புலனாய்வு அதிகாரியிடம் உங்கள் அடையாள அட்டைையை காண்பிக்குமாறு கோரியுள்ளார்.

 அவ்வேளை அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தப்பிச் சென்றுள்ள நிலையில் அங்கு அவருடன் வருகை திருந்த ஒருவரை பிடித்து அங்கு வந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 இது தொர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!