பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

#Tamil Nadu #Bus #Tamil Student #students #Tamilnews #Breakingnews
Mani
3 years ago
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் 2200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாகவும், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4