சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அண்டிய பகுதிகளுக்கு காட்டு யானைகள் வராமலிருக்க நடவடிக்கை!
#SriLanka
Mayoorikka
2 years ago
ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சூழவுள்ள பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருவதை தடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்காக ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் அலுவலகம் மற்றும் மதுனாகலை பீட்டு அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அப்பகுதிக்குள் புகுந்த பல காட்டு யானைகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.