சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து

#SriLanka #Lanka4 #fire #Factory
Kanimoli
2 years ago
சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து

பாணந்துறை கிரிபெரியவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் உள்ள களஞ்சியசாலையில் கொரோனா உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

 தீயை அணைக்க ஹொரண களுத்துறை மொரட்டுவ மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன. கொரோனா உடைகள், முகமூடிகள், சத்திரசிகிச்சையின் போது அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்கள் மற்றும் முப்பது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும், தீ விபத்து தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!