தேசிய சேமிப்பு வங்கியின் கடந்த ஆண்டுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு!
தேசிய சேமிப்பு வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
தேசிய சேமிப்பு வங்கியானது பொருளாதார கட்டமைப்பிற்குள் அதன் செயற்திறன் மற்றும் சமூகஇ சுற்றுச்சூழல் துறைகளுடனான அதன் உறவை பிரதிபலிக்கும் வகையில் ‘எங்கள் பலத்தை வலுப்பNational Savings Bank last year report submissionடுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் அதன் ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2022 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் செயற்திறன் மூலோபாயம்இ நிறுவன நிர்வாகம் உள்ளிட்ட தேசிய சேமிப்பு வங்கி தொடர்பில் விரிவான பகுப்பாய்வு குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பீரிஸூம் நிகழ்வில் கலந்துகொண்டார்.