கனடாவில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்: 18 மாணவர்கள் படுகாயம்
#Canada
#world_news
#School Student
Mani
2 years ago
கனடாவின் வின்னிபெக் மாகாணம் உள்ள செயின்ட் போனிபேஸ் பகுதியில் ஒரு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகம் படிக்கும் மாணவர்களுக்காக ஒரு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது. பின்னர் அவர்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜிப்ரால்டர் கோட்டையை பார்வையிட்டனர்.
5 மீட்டர் உயரமுள்ள நடைபாதையில் ஏறி மாணவர்கள் கோட்டையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென நடைபாதை இடிந்து விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில், 17 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்ததுடன், அவர்களுடன் இருந்த ஆசிரியர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.