சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் தமிழரை சேர்ந்த ஆறுமுகம் ரூ.12 லட்சம் மதிப்பிலான பரிசை வென்றார்
சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் நிறுவனம், தங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அதில் தொலைக்காட்சி தொடர் பாணியில் விளையாட்டு அரங்கம் தயார் செய்து பணியாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்தனர்.
அரங்கின் நடுவில் பணப் பை அடங்கிய ராட்சத பலூன் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
இதில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம், 42 வயதில், ராட்சத பலூன் பிடிப்பு போட்டியில் வெற்றி பெற்றார். தமிழரான ஆறுமுகம், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெற்றி பெற்ற ஆறுமுகத்திற்கு ரூ.12 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. ல மாதங்களுக்கு முன், சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை மற்ற பல பரிசு பொருட்களுடன் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.