மருத்துவர்களின் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!

#SriLanka #doctor
Mayoorikka
2 years ago
மருத்துவர்களின் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!

அரச விசேட வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியானால் கட்டாய ஓய்வு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 அந்த ஆட்சேபனைகளை 176 மருத்துவர்கள் மற்றும் பலர் தாக்கல் செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 இது தொடர்பான மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

 சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு ஓய்வு அளிக்க தடை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!