பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை
#School
#UnitedKingdom
#students
#Ban
#Ciggerette
Prasu
3 years ago
பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும்.ஆனால் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
18வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் இல்லாத புகையிலைகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறுஆய்வு செய்யும் என்று அரசு அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே