உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சில் 3 பேர் மரணம்

#Death #Russia #Ukraine #War #BombBlast
Prasu
2 years ago
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சில்  3 பேர் மரணம்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த சண்டையில் ஏராளமானோர் உயிர் இழந்து உள்ளனர். ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இன்று அதிகாலை தொடர்ச்சியாக 17 முறை குண்டுகளை ரஷியா வீசியது. இந்த வான்வெளி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்து விட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இந்த குண்டு வீச்சில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!