பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
#SriLanka
#Arrest
#Police
#Prison
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனை நிலுவையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் தண்டனை 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு,
மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சிறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.