ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கநாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் தொகுப்பு
நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரையின் தொகுப்பு
* ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் 04 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்
* அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம்
* நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம் துரித பொருளாதார மறுசீரமைப்பு செயற்பாட்டில் அரச - தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம்!
* மோசடியை ஒழிக்க விசேட செயலணி
மேற்கூறியவை ஜனாதிபதியின் உரையின் முக்கிய வரைபாக காணப்பட்டது. மேலும் அவரது உரையில்...
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக நிலைமாற்றும் செயற்பாட்டுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை அமுல்படுத்த தனியார் துறையிடமிருந்து முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டாய்வு முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த 05 ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதோடு, அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் கடின நிலையையும் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என அவரது முடிவுரையில் தெரிவிக்கப்பட்டது.