யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ். நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

#SriLanka #Jaffna #Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ். நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் கலாச்சார படுகொலை என கூறப்படும் தென்கிழக்காசியாவிலேயே பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ். நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

 யாழ்ப்பாணம் பொது நூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வானது யாழ். பொது நூலகத்தில் பிரதம நூலகர் செல்வி ராகினி நடராஜ் தலைமையில் நடைபெற்றது.

 இதன்போது யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட போது அதனுடன் தொடர்புடைய சம்பவங்களில் உயிரிழந்தவர்ளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் ம.ஜெயசீலன் நூலக ஊழியர்கள்,வாசகர்கள், உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!