கௌதாரி முனையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி இல்லை!
கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ் சிறிதரன், அங்கயன் இராமநாதன், செ கஜேந்திரன் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருந்த கலந்து கொண்டனர்.
இதன்போது, அதாணி குடும்பத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அபிவிருத்திக் கூழுவின் அனுமதிக்காக எடுக்கப்பட்டது.
இதன்போது வாதங்கள் இடம்பெற்றன. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
குறித்த வீதியை காபெட் வீதியாக அமைப்பது தொடர்பில் எவ்வித உறுதிகளும் வழங்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது எனவும் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முறையான நடைமுறைளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதன் தொடர்ச்சியாகவே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைவிட, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சட்டவிரோத மணல் அகழ்வு, போதைவஸ்து பயன்பாடு மற்றும் கால்நடை திருட்டு தொடர்பான துறைசார்ந்த திணைக்கள அறிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத் துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது. குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசனம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

