வட பகுதி கடற்பிரதேசத்திற்கு வரும் ஆபத்து: பாதுக்காக்க ஜனாதிபதியிடம் மீனவர்கள் கோரிக்கை

#SriLanka #NorthernProvince #Fisherman
Mayoorikka
2 years ago
வட பகுதி கடற்பிரதேசத்திற்கு வரும் ஆபத்து: பாதுக்காக்க ஜனாதிபதியிடம்  மீனவர்கள் கோரிக்கை

காங்கேசன்துறை தொடக்கம் பருத்தித்துறை வரையான கடல் பிரதேசத்தில் வெளிச்சத்தினை பாய்ச்சி சுருக்குவலை தொழில் இடம்பெறுவதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 வடமராட்சி ஊடக இல்லதில் இன்றைய தினம் ஊடகவிலாளார்கள் சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

 இந்த ஊடகவியாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து பருத்தித்தித்துறை பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றை கையளித்தனர்.

 அந்த மனுவில், காங்கேசன்துறை தொடக்கம் பருத்தித்துறை வரையான கடல் பிரதேசத்தில் வெளிச்சத்தினை பாய்ச்சி சுருக்குவலை தொழில் இடம்பெறுவதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

 1500 இருக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் கடற்தொழிலில் அப்பிரதேசத்தில் தொழில் புரிகின்றோம். ஆனால் 50 சுருக்கு வலைகள், சட்டத்தை மீறி சிறிய மீன்களை பிடிப்பதனால் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது.

 இந்த சட்டவிரோத சுருக்குவலை தொழிலை நிறுத்தி எமது பகுதி கடற்தொழில் குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை பெறவும் எதிர்காலத்திலும் தொழில் இடம்பெறும் உறுதிப்படடை நிலை செய்து எமக்கான வழியை காட்டுமாறு 50 முதலாளிகளினால் 1500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பதை எதிர்நோக்குகின்றோம். 

 எமது வாழ்வாதாரத்தை துறை சார்ந்தோர் கண்டுகொள்ளாத நிலை தொடர்கின்றது.

 அத்தோடு 1997,2017 2018ம் கடற்தொழில் நீரியல் வளங்கள் சட்டத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் வட பகுதி கடலையும் சூழலையும் பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!