பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்திய இலங்கை மத்திய வங்கி!
#SriLanka
#Bank
#Central Bank
#money
Mayoorikka
2 years ago
இலங்கை மத்திய வங்கி தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்த தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வீதத்தை 13 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதத்தை 14 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததை விட வேகமாக பணவீக்கம் குறைந்ததே இந்த முடிவை எடுக்க காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.