இந்தியாவிலிருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இலங்கைக்கு!
இந்தியாவிலிருந்து தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக இந்தியாவில் உள்ள 5 பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து மொத்தம் 2 கோடி முட்டைகளை நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 கோடி முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படும்.
தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும். பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் 35 ரூபா என்ற விலையில் வழங்கப்படும் என்று கூறினார்.