நடிகை சுனைனா நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
#Cinema
#TamilCinema
#2023
#trailer
#Tamilnews
#Movies
Mani
2 years ago
தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. மாசிலாமணி, வம்சம், சில்லு கருப்பட்டி கடைசியாக லத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்திற்கு பிறகு நடிகை சுனைனா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.