பொசன் வலயங்கள் களுக்கு விசேட பஸ் சேவை

#SriLanka #Bus #Lanka4 #vesak
Kanimoli
2 years ago
பொசன் வலயங்கள் களுக்கு விசேட பஸ் சேவை

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பொசன் வலயங்கள் இயங்கி வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

 இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர், பொசன் பண்டிகை அனுராதபுரத்தில் மிஹிந்தல ரஜமஹா ஆலயம் மற்றும் தந்திரிமலையை மையமாக வைத்து நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

 மஹியங்கனை மற்றும் ஹோமாகம – பிடிபன பொசன் வலயங்களுக்கு வரும் பக்தர்களுக்காக விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. அநுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!