இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள்

#SriLanka #Colombo #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள்

பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்கள் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களை ரத்து செய்யுமாறு கோரி இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார ஆகியோரால் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

 தேசிய தேசப்பற்று முன்னணியின் செயலாளர் நுவான் பல்லந்துடாவ மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர் ஜே.ஏ.டி.எம்.ஜயதிலக ஆகியோரினால் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 அந்த மனுக்களில் பிரதிவாதிகளாக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 23 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 அதன்படி, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கா டெலிகொம், ஹில்டன் ஹோட்டல், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம், லிட்ரோ கேஸ் நிறுவனம், லங்கா ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம், வாட்டர்ஸ் ஏஜ் ஹோட்டல் உள்ளிட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இருந்த போதிலும் தற்போது சட்டத்திற்கு முரணான பல அரச நிறுவனங்கள், இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்கள் உட்பட பல அரச நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த வரவு செலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாகவே பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், பொது நிறுவனங்களின்.விற்பனைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கவில்லை எனவும் தமது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். 

 அரசியலமைப்பின் பிரகாரம் அரச சொத்துக்களை பாதுகாக்க அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மக்களின் இறையாண்மை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்படி, சட்டத்திற்கு புறம்பாக அரச நிறுவனங்களை விற்பனை செய்ய எதிர்மனுதாரர்கள் எடுத்துள்ள தீர்மானம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவும், சபையின் தீர்மானங்களை செல்லுபடியாகாத தீர்ப்பை வழங்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!