இந்திய கடன் உதவித் திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு
#India
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் உதவித் திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதியமைச்சில் இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி ஒரு வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் டொலர்களில் 576 மில்லியன் 7.5 மில்லியன் டொலர் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அடுத்த ஒரு வருடத்திற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.