ராணுவ உளவு செயற்கைகோள் ஜூனில் ஏவப்படும்: வடகொரியா

#NorthKorea #Japan #Tamilnews #ImportantNews
Mani
3 years ago
ராணுவ உளவு செயற்கைகோள் ஜூனில் ஏவப்படும்: வடகொரியா

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.

இது தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், வடகொரியா நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஐ.நா தடை விதித்துள்ளது.

ராணுவ உளவு நோக்கங்களுக்காக ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்கள் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜப்பான் கூறியுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு, தங்கள் நாட்டின் வான்வெளியில் ஊடுருவி வரும் செயற்கைக்கோள் அல்லது விண்வெளி குப்பைகளை இடைமறித்து அழிக்குமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4