விசாக் காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அபராத கட்டணத்தில் மாற்றம்
விசாக் காலம் கடந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணத்துடன் மேலதிகமாக அமெரிக்க டொலர் 500 அபராதம் விதிப்பதற்கு பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு, மத மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் பொதுப் பாதுகாப்பு அமைச்சரால் செய்யப்பட்ட உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, செல்லுபடியாகும் வீசா காலத்தை கடந்த 07 நாட்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டினருக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
07 நாட்கள் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலம் தங்கியிருந்தால் 250 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும்இ செல்லுபடியாகும் விசா காலத்தை 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.